டாக்கா:நம் அண்டை நாடான வங்கதேசத்தின் டாக்காவில் எப் - 7 என்ற விமானப் படையின் பயிற்சி விமானம், நேற்று முன்தினம் புறப்பட்ட சில நிமிடங்களில் பள்ளி கட்டடம் ஒன்றின் மீது விழுந்தது. இதில், சீன தயாரிப்பான அந்த போர் விமானம் வெடித்து சிதறியது.இந்த விபத்தில், பள்ளியில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட, 20 பேர் பலியாயினர். இதைத் தவிர, 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்நிலையில் தீக்காயமடைந்த மேலும் 11 பேர் நேற்று பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 31ஆக உயர்ந்தது. இதில் 25 பேர் மாணவர்கள். பெரும்பாலானோர் 12 வயதுக்கு உட்பட்டவர்கள்.