கீவ்: ''போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்ய அதிபர் புடினை நேரில் சந்தித்து பேச தயாராக இருக்கிறேன்'' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக ரஷ்யா மீது இன்னும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி வருகிறார். அதேநேரத்தில், பேச்சுவார்த்தை மூலம் அமெரிக்கஅதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் கொண்டு வர முயற்சி செய்கிறார்.இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்ய அதிபர் புடினை நேரில் சந்தித்து பேச தயாராக இருக்கிறேன்.