தமிழ் சினிமாவிலிருந்து ஹாலிவுட் வரை சாதித்திருக்கும் தனுஷ், சமீபத்தில் ஒரு பேட்டியில் வெற்றிமாறன் இணைப்பு குறித்து ஒரு சுவாரஸ்யத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், பொல்லாதவன் படத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அவரது குடும்பத்தினர் கூட அந்த படத்தை செய்ய வேண்டாமென கூறியதாகவும் தெரிவித்தார்.
"எனக்கோ அந்த கதையில் நம்பிக்கை இருந்தது. வெற்றிமாறனிடம் 'நாம்கண்டிப்பா ஜெயிப்போம்'ன்னு சொன்னேன்," என்று அவர் கூறினார்.
தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி இன்று தமிழ் சினிமாவின் சக்திவாய்ந்த காம்போவாக விளங்குகிறது.