பொய் MyKad பயன்படுத்தும் குற்றங்களுக்கு கடும் தண்டனையை விதிக்க தேசிய பதிவுத்துறை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது என உள்துறை அமைச்சர் சைபுத்தீன் நஸூஷியான் தெரிவித்தார்.
தற்போதைய சட்டத்தில், குற்றம் செய்தவருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை அல்லது RM20,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தேசிய பாதுகாப்பையும் குடிமக்களின் அடையாள மேலாண்மையும் பாதிக்கும் வகையில் உள்ள இந்த போலி ஆவணப் பயன்படுத்தலை அரசு தீவிரமாகக் காண்கிறது. அதனை தடுக்கவே புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன.
இதில் சில குற்றங்களை சமாளிக்க கூடிய வகையில் (compoundable offences) புதிய விதிமுறைகளும் சேர்க்கப்பட உள்ளன.
2022 முதல் கடந்த ஆண்டு வரையில் 42 லட்சத்திற்கும் மேற்பட்ட MyKad சம்பந்தப்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 138 வழக்குகள் போலி ஆவணங்களுடன் தொடர்புடையவை எனத் தெரிவித்தார்.