கெலந்தானில் 2022-ல் 7 மாத கர்ப்பமாக இருந்த பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த 24 வயதான சந்தேகநபர், 3 ஆண்டுகள் கழித்து பாசிர் மாஸ் அருகே கைது செய்யப்பட்டுள்ளார்.
GOF படையினர் நேற்று மாலை 7 மணிக்கு கம்போங் புக்கிட் லாட்டாவில் சந்தேக நபரையும், அவருடன் இருந்த மற்றொரு 24 வயதான இளைஞரையும் கைது செய்தனர்.
இருவரும் மெத்தாம்பெட்டமின் போதை மருந்து சோதனையில் நேர்மறையாக வந்தனர்.
2022-ல், காரின் உள்ளே சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் 26 வயதான கர்ப்பிணி பெண் ஃபர்ரா எமிரா மஸ்லான் காணப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் தற்போது 7 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு, கொலைக்குற்றமாகக் குற்றவியல் சட்டம் 302ன் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.