குலா திரெங்கானுவில், புட்சால் விளையாட்டுக்குப் பிறகு வீடு திரும்பிய 35 வயதான மருத்துவர் முஹம்மது ஹரிஸ் ஹாஷிம், ஜலான் கம்போங் உண்டாங் சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
இரவு 11 மணியளவில் ஏற்பட்ட விபத்தில், அவர் ஓட்டிய பெரோடுவா ஆல்ஸா கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எரிவாயு சிலிண்டர் கிடங்கில் மோதியது.
தலையில் தீவிர காயங்களுடன் அவரை சுல்தானா நூர் ஸாஹிரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், 11.33 மணிக்கு மரணம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.