Offline
Menu
சபாவில் நடைபெறும் KAR Ultra 2025 உலகெங்கும் இருந்து ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்பு
By Administrator
Published on 07/25/2025 09:00
News

சபாவின் பிரசித்திபெற்ற KAR Ultra 2025 ஒட்டப்பந்தயத்தில் உலகின் 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

கோட்டா பெலுட் பகுதியின் இயற்கை அழகு, பாரம்பரிய கிராமங்கள், மலை பாதைகள் மற்றும் சுற்றுலா தளங்களை கடந்த 110KM, 60KM, 35KM மற்றும் 12KM என நான்கு பிரிவுகளில் இப்பந்தயம் நடைபெறவுள்ளது.

இதன் மூலம் வீரர்கள் தங்களின் உடல் சக்தியைச் சோதிக்கவும், சபாவின் கலாசார மரபில் மூழ்கவும் வாய்ப்பு கிடைக்கும்.

இது வெறும் ஓட்டப்பந்தயமாக இல்லாமல், சபாவின் இயற்கை, கலாசாரம், மக்களின் சக்தியை கொண்டாடும் மேடையாக மாறிவிட்டது என நிகழ்வு இயக்குனர் ஜவடியுஸ் போல்லா தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு UTMB உலகத் தொடரில் தகுதி பெறும் போட்டியாகவும், International Trail Running Association (ITRA) மற்றும் Malaysia Ultra Running Association (MURA) ஆகியவற்றின் உறுப்பினராகவும் உள்ளது.

இது இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வழங்கிய சர்வதேச பந்தய அனுமதியும் பெற்றுள்ளது.

இதனுடன் இணையாக "கர்னிவல் ஹார்மோனி கடாமையன்" நிகழ்வும் நடைபெற உள்ளது. இதில் உள்ளூர் கலைஞர்கள் முதல் தேசிய தொழிலதிபர்கள் வரை பலர் பங்கேற்று தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவுள்ளனர்.

தொழில் வளர்ச்சி மற்றும் கூட்டுறவு அமைச்சர் மற்றும் கடாமையன் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ எவோன் பெனடிக் இந்தக் கர்னிவலைத் திறக்கவுள்ளார்.

Comments