RM100 பண உதவியை சிரிச்சுப் பார்ப்பதைப் போல சிலர் நடந்துகொள்வதாக கூறியுள்ளார் பிரதமர் அன்வார் இப்ராஹிம். இது சிறிய தொகையாக தெரியலாம், ஆனால் இதுவும் நிதி சுமையை குறைக்கும் முக்கியமான நடவடிக்கை என்றார்.
"ஒரு குறைந்த வருமான குடும்பத்தில், இரு பெற்றோரும், 18 வயதுக்கு மேற்பட்ட இரு பிள்ளைகளும் தகுதியுடையவர்களாக இருந்தால், STR மற்றும் SARA திட்டங்களுடன் சேர்த்து அவர்கள் பெறும் தொகை RM700 வரை செல்லும். தனிநபருக்கு இது குறைவாக இருக்கலாம். ஆனால் 'வெறும் RM100' என சொல்லி அதை மாசுபடுத்தாதீர்கள்," என எச்சரித்தார்.
இது அரசு வழங்கக்கூடிய கூடுதல் ஆதரவாகும் என்றும், விமர்சனம் இருப்பது சகஜம் என்றாலும் உதவித் தொகையை கௌரவத்துடன் பார்ப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.