லங்காவியில் தற்போது RM500க்கு 3 நாள் 2 இரவு (3D2N) தங்கும் வசதியுடன், ஐந்து சிறப்பு செயல்கள் அடங்கிய ரகமா சுற்றுலா பாக்கேஜ் அறிமுகமாகியுள்ளது.
டூரிசம் மலேசியா வடக்கு மண்டல அலுவலகமும், உள்ளூர் சுற்றுலா இயக்குநர்களும் இணைந்து வடிவமைத்த இந்த திட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
2025-ம் ஆண்டு "விஜிட் கெதா" மற்றும் 2026-ம் ஆண்டு "விஜிட் மலேசியா" திட்டங்களுக்கு ஆதரவாக இது முன்னோடியாக இருக்கும் எனவும் கூறப்பட்டது.
பாக்கேஜில் ஜெட் ஸ்கீ மூலம் தீவுகள் சுற்றுலா, மஹா டவர், தேசிய கலைக்கூடம் பார்வை, கடல் உயிர்கள் வேட்டையாடல் (உதம்பு, நண்டு) உள்ளிட்ட அனுபவங்கள் உள்ளடங்கியுள்ளது.
இந்திகோ மற்றும் ஃப்ளை துபாய் விமான சேவைகள் மூலமாக இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாட்டவர்களையும் ஈர்க்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டது.