நித்யா மேனன் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகை. தற்பொழுது 'தலைவன் தலைவி' படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துவருகிறார். அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி அளித்த போது, 37 வயதாகியும் திருமணம் செய்யாததற்கு அவர் தனது எண்ணங்களை பகிர்ந்தார். பெண் திருமணம் செய்யாததால் தோல்வியாய் பார்க்கப்படுவது தவறு; காதலை தேடி, அதன் அடிப்படையில் திருமணம் செய்வது எளிதல்ல என கூறினார். திருமணம் செய்தால் சந்தோஷம், செய்யாமல் இருந்தாலும் சந்தோஷம்தான் என்று நித்யா மேனன் தெரிவித்தார்.