கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றும் சுந்தர் பிச்சை, தமிழ் நாட்டில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து 2004ஆம் ஆண்டு கூகுளில் பணியாளராக சேர்ந்தவர். ஆண்ட்ராய்டு பிரிவை வழிநடத்திய அவர், 2015ஆம் ஆண்டு தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்றதிலிருந்து நிறுவன பங்குகள் 400 சதவீதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளன.செயற்கை நுண்ணறிவில் கூகுள் அடைந்த முன்னேற்றம் நிறுவன வளர்ச்சிக்கு ஊக்கமாக இருந்தது. 2023ஆம் ஆண்டு முதல் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாகவும், முதலீட்டாளர்களுக்கு 120 சதவீதம் வருமானமும் வழங்கியுள்ளது.இவையெல்லாம் சேர்ந்து சுந்தர் பிச்சையை பில்லியனர் அந்தஸ்துக்கு உயர்த்தி இருக்கின்றன. ப்ளூம்பெர்க் அறிக்கைப்படி அவரது சொத்து மதிப்பு ரூ.9 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது. போர்ப்ஸ் பட்டியலிலும் அவர் ரூ.1.2 பில்லியன் நிகர மதிப்புடன் இடம் பெற்றுள்ளார்.