சிங்கப்பூர் நிலப்பரப்புப் போக்குவரத்து ஆணையம் (LTA), கடந்த ஆண்டு செப்டம்பரில் கிழக்கு–மேற்கு எம்ஆர்டி வழித்தடத்தில் ஏற்பட்ட ஆறு நாள்கள் சேவை பாதிப்புக்கு, பொது போக்குவரத்துச் சேவை வழங்கும் SMRT-க்கு S\$2.4 மில்லியன் அபராதம் விதித்துள்ளது. இது ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட S\$3 மில்லியனைவிட குறைவானது.SMRT தனது விளக்கங்களை சமர்ப்பித்ததை தொடர்ந்து, அபராத தொகை குறைக்கப்பட்டதாக LTA தெரிவித்துள்ளது. இந்த அபராதம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் போக்குவரத்துச் செலவுகளை சுருக்க “பொது போக்குவரத்து நிதிக்குள்” செலுத்தப்படும்.மேலும், SMRT நிறுவனம் குறைந்தபட்சம் S\$600,000 முதலீடு செய்து, சேவை நம்பகத்தன்மையை உயர்த்த தேவையான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், வழிகாட்டப்பட்டுள்ளது. கோவிட் காரணமாக ஏற்பட்ட உலகளாவிய உதிரிபாகக் கடத்தல் சிக்கல்களால், பழுது பார்ப்பதற்கான திட்டங்களை SMRT முன்னெடுத்ததில் ஏற்பட்ட சவால்களையும் LTA கருத்தில் எடுத்ததாக தெரிவித்துள்ளது.