Offline
Menu
சுமாத்திரா, கலிமந்தானில் பரவலாகவும் தீவிரமாகவும் காட்டுத்தீயுடன் போராடும் இந்தோனேசியா.
By Administrator
Published on 07/27/2025 09:00
News

இந்தோனேசியாவின் சுமாத்திரா மற்றும் கலிமந்தானின் பல பகுதிகளில் பரவி வரும் காட்டுத்தீயை தேசிய பேரிடர் முகமை (BNPB) தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஜனவரி 1 முதல் ஜூலை 22 வரை 2,543 சூடுப் புள்ளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதில் 43 ஹெக்டேருக்கு மேல் நிலப்பரப்புகள் தீக்கிரையாகியுள்ளது.தெற்கு சுமாத்திராவின் பல மாவட்டங்களில் ஏற்பட்ட தீயை அவசர அணைப்பு படைகள் முழுமையாக கட்டுப்படுத்தியுள்ளதாக BNPB செய்தித்தொடர்பாளர் அப்துல் முகாரி தெரிவித்துள்ளார். ஆனால் மேற்குச் சுமாத்திராவின் லிமாப்புலுஹ் கோட்டாவில் ஜூலை 12 முதல் ஆரம்பமான தீ, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இன்னும் தீவிரமாகவே உள்ளது.

வடக்கு சுமாத்திராவின் பாடாங் லாவாஸ் பகுதியில் 435 ஹெக்டேருக்கு மேல் நிலம் தீயால் பாதிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதும், சில இடங்களில் இன்னும் சாமர்த்தியமாக அணைக்கும் பணி தொடர்கிறது.ரியாவ் மாகாணத்தில் மட்டும் இந்த ஆண்டு இதுவரை 1,144 ஹெக்டேர் நிலம் தீக்கிரையாகியுள்ளது. மேற்கு கலிமந்தானில் தீவிர தடுப்பு நடவடிக்கையால் சூடுப் புள்ளிகள் 17 லிருந்து 3 ஆக குறைந்துள்ளன. மத்திய மற்றும் கிழக்கு கலிமந்தானில் ஏற்பட்ட 201 ஹெக்டேர் அளவிலான தீயும் முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது.மொத்தத்தில், பெரும்பாலான பகுதிகளில் தீ கட்டுப்படுத்தப்பட்டாலும், சில பகுதிகளில் இன்னும் தீயணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Comments