இந்தோனேசியாவில் ஒரே எதிர்க்கட்சியான ஜனநாயக போராட்டக் கட்சியின் (PDIP) பொதுச் செயலாளர் ஹாஸ்டோ கிரிஸ்தியாண்டோ, லஞ்ச வழக்கில் 3.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக, தேர்தல் அதிகாரிக்கு சிங்கப்பூர் டாலர் 57,530 அளவு லஞ்சம் வழங்கியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டது.எனினும், நீதிமுறை தடையாக செயல்பட்டதாகவும், சாட்சிகளை அழிக்க கட்சி உறுப்பினர் கைபேசிகளை தண்ணீரில் மூழ்கச் செய்ததாக கூறப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படவில்லை. விசாரணைகள் தொடரும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.இது தொடர்பான விசாரணை ஐந்து ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது. ஹாஸ்டோவின் கட்சி, கடந்த தேர்தலில் ஜனாதிபதி பிரபோவோவுக்கு எதிராக வேட்பாளர் ஒருவரை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஹாஸ்டோவின் மேல்முறையீடு குறித்து தகவல் இல்லை.முந்தைய வாரம், அதே நீதிமன்றம் முன்னாள் வர்த்தகத் துறை அமைச்சரான மற்றும் அரசைக் கண்டித்திருந்த டோமஸ் லெம்போங் என்பவருக்கு சர்க்கரை இறக்குமதியில் முறைகேடு செய்ததாக 4.5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.