கோலாலம்பூரில், நகர்ப்புற புதுப்பித்தல் சட்டத்திற்கு எதிரான எதிர்ப்பு, பிரதமர் அன்வார் இப்ராஹிம் பதவிநீக்கத்துக்காக “துருன் அன்வார்” பேரணியாக மாறியுள்ளது. பாஸ் இளைஞர் அமைப்பால் நடத்தப்படும் இந்த போராட்டத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டாலும், காவல்துறை மதிப்பீட்டின்படி 10,000 முதல் 15,000 பேர்தான் திரண்டுள்ளனர்.போராட்டக்காரர்கள் மஸ்ஜித் நெகாரா, பசார் சேனி, ஜமேக் மஸ்ஜித்கள் மற்றும் சோகோ ஷாப்பிங் மால் உள்ளிட்ட ஐந்து இடங்களில் காலை 11 மணி முதல் திரண்டுள்ளனர். குறிப்பாக சோகோவில் எழுச்சி அதிகமாக இருந்தது. பாஸ் துணைத் தலைவர் அமர் அப்துல்லா இந்த பேரணியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.