Offline
Menu
குவாந்தான் BASE Jump விபத்து: ஒருவர் காயம், இருவர் பாதுகாப்பாக மீட்பு.
By Administrator
Published on 07/27/2025 09:00
News

குவாந்தான் 188 பெருவிழாவின் போது நடைபெற்ற BASE Jump Extreme Challenge நிகழ்வில் நேற்று மாலை விபத்து ஏற்பட்டது. இதில் 62 வயதான ஜெய்னல் சிக் கான்கிரீட் பகுதியில் தரையிறங்கி காயமடைந்தார். அவரை உடனடியாக தெங்கு அம்புவான் அப்ஸான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ மோர்கோம் ஒரு மரத்தில், மலேசிய வீரர் மனன் மகுசின் ஆற்றில் பாதுகாப்பாக இறங்கினர். இருவரும் பாதிப்பின்றி இருப்பது உறுதிசெய்யப்பட்டது. சம்பவத்திற்கு ஏற்பாடு குழுவும், பாதுகாப்புப் பணியாளர்களும் விரைந்து செயல்பட்டனர்.

Comments