ஜோகூர் பாருவில் கோத்தா திங்கி – ஜாலான் சுங்கை ரெங்கிட் சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில், 18 மற்றும் 19 வயதுடைய இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் உயிரிழந்தனர்.கிலோமீட்டர் 60.5 பகுதியில் யமஹா Y15ZR பைக்குகள் ஒரு லோரியின் பின்பக்கத்தில் மோதியதில், இருவரும் தலையில் கடுமையாக காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்து குறித்து அதிகாலை 1.24 மணிக்கு போலீசுக்கு தகவல் வந்தது. உயிரிழந்தோர் உடல்கள் கோத்தா திங்கி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. லோரி டிரைவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சம்பந்தப்பட்ட தகவல்களைப் பகிரும் வகையில் பொதுமக்கள் போலீசைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.