கோலாலம்பூர் — பிரதமர் அன்வார் இப்ராஹிமின் பதவிவிலகலை கோரியும், அரசுக்கு எதிராகவும் நடத்தப்படும் ‘துருன் அன்வார்’ பேரணிக்கு மஸ்ஜித் நெகாராவிலிருந்து தத்தாரான் மெர்டேகாவுக்கு சுமார் 5,000 பேரர் பங்கேற்பர் என போலீசார் எதிர்பார்க்கின்றனர். சோகோ மாலிலிருந்து 3,000–4,000 பேரும், மஸ்ஜித் ஜமேக்கில் இருந்து 500 பேரும் பேரணியில் பங்கேற்கலாம்.பாஸ், பெர்சாத்து தலைவர்கள் மற்றும் டுன் டாக்டர் மகாதீர் உள்ளிட்டோர் தத்தாரான் மெர்டேகாவில் உரையாற்றவுள்ளனர்.இதற்காக 2,000க்கும் மேற்பட்ட போலீசார் நிலைநாட்டப்பட்டுள்ளனர். ஏதேனும் சிக்கல் அல்லது சட்டவிரோதச் செயல் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசுப் எச்சரித்துள்ளார்.இந்நிலையில், பிரதமர் அன்வார் அமைதியான எதிர்ப்பு உரிமையை மதிப்பதாக கூறியதுடன், பொறுப்புடன் நடந்துகொள்ளக் கோரியுள்ளார். அதே நேரத்தில், அரசுப் பணியாளர்கள் இந்த பேரணியில் பங்கேற்றால் ஒழுக்க நடவடிக்கைக்கு உள்ளாகலாம் என தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.