புத்ராஜாயாவில் நடைபெற்ற 50வது பிரதமர் கோப்பை வாதப்போட்டியின் முடிவுரை நிகழ்வில், “துருன் அன்வார்” பேரணியில் கலந்துகொள்வீர்களா எனக் கேட்கப்பட்ட பிரதமர் அன்வார் இப்ராஹிம், “எனக்கு அழைப்பு வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.இந்த போராட்டம் இன்று மாலை சோகோ மற்றும் பெர்தமா காம்ப்ளக்ஸ் அருகே ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புடன் நடைபெற்றது. சமீபத்திய மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பின்படி, அமைதியான பேரணிக்கு முன்பறிவிப்பு கட்டாயம் அல்ல என்பதையடுத்து, அதிகாரிகள் பேரணிக்கு அனுமதி வழங்கினர்.நகரம் முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.முன்னதாக, அன்வார், அரசு விமர்சனத்தையும் அமைதியான போராட்டத்தையும் வரவேற்கின்றது என தெரிவித்தாலும், பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு போராட்டக்காரர்களுக்கு அறிவுறுத்தினார். இதேவேளை, அரசுத் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி, அரசு ஊழியர்கள் இவ்வாறான போராட்டங்களில் பங்கேற்றால் ஒழுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.