மேக்சிம், இன்டிரைவ் தொடர் அனுமதிக்கு உள்ளூர் ஓட்டுநர்கள் எதிர்ப்பு
கோலாலம்பூர்: இ-ஹெய்லிங் நிறுவனங்களான மேக்சிம் மற்றும் இன்டிரைவ், விதிமீறல்களுக்குப் பிறகும் மூன்று மாத கண்காணிப்பின் கீழ் தொடர்ந்து செயல்பட APAD அனுமதித்ததற்கு உள்ளூர் ஓட்டுநர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வட மாநில இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள் சங்கத்தின் (NeHDA) தலைவர் ஜாபிடி பஹாடோர், வெளிநாட்டு நிறுவனங்களுக்கான இந்த மென்மைப் போக்கு உள்ளூர் நிறுவனங்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும், விதிகள் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.