அன்வார் எதிர்ப்புப் பேரணி: 20 டன் குப்பைக்கு அமைச்சர் கண்டனம்
கோலாலம்பூர்: நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ‘துருன் அன்வார்’ பேரணிக்குப் பிறகு, சுமார் 20 மெட்ரிக் டன் குப்பைகள் குவிந்திருந்ததால், வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கடும் கண்டனம் தெரிவித்தார். இது "மிகவும் வெட்கக்கேடானது" என அவர் சாடினார். சுமார் 18,000 பேர் கலந்துகொண்ட இந்த அமைதியான பேரணிக்குப்பின், இரவு முழுவதும் துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது.