லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய LCU (லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்)-வில் ‘லியோ’, ‘கைதி’, ‘விக்ரம்’ உள்ளிட்ட ஹிட் படங்கள் இணைந்துள்ளன. தற்போது, 'பென்ஸ்' திரைப்படம் மற்றும் எதிர்பார்க்கப்படும் 'கைதி 2'-வும் இதைத் தொடருகின்றன.
இந்நிலையில், LCU-வில் முதல் முறையாக பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு புதிய படம் தயாராகவுள்ளது. இதில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சமந்தா ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை லோகேஷ் இயக்காமல், தயாரிப்புப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பும் கூறப்படுகிறது. ஆக்ஷனில் முன்வந்த சமந்தா, ‘சிட்டாடல்’, ‘யசோதா’, ‘பெமிலி மேன்’ போன்ற வெற்றி படங்களில் காட்டிய திறமையை மீண்டும் நிரூபிக்கவுள்ளார்.
ஆதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.