Offline
பெனாங்: 15 நாள் வயது பிள்ளை உட்பட 20 குழந்தைகள் அபாயகரமான பராமரிப்பு இல்லங்களில் இருந்து மீட்பு.
By Administrator
Published on 07/29/2025 09:00
News

பெனாங்கில், பாதுகாப்பற்ற பராமரிப்பு இல்லங்களில் இருந்த 15 நாள் குழந்தை உட்பட 20 குழந்தைகள் சமூக நலத்துறை மற்றும் போலீசாரால் கடந்த ஜூலை 21ஆம் தேதி மீட்கப்பட்டனர். 15 நாள் முதல் 16 வயது வரையிலான இக்குழந்தைகளில் 10 ஆண்கள், 10 பெண்கள் அடங்குகிறார்கள். இவற்றில் 12 குழந்தைகளுக்கு பிறந்த சான்றிதழ்கள் இல்லை என்றும், இருவர் குடும்ப பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மாநில நலத்துறை தலைவர் லிம் சியூ கிம் தெரிவித்தார்.சோதனையில், சுகாதாரமற்ற களஞ்சியத்தில் 5 குழந்தைகள் மற்றும் ஒரு குடியிருப்பு பகுதியிலுள்ள கற்பித்தல் மையத்தில் 15 குழந்தைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைகள் உணவும், உடை மற்றும் பாதுகாப்பான தங்குமிடமும் இன்றி வாழ்ந்ததுடன், சிலருக்கு தொற்றுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.தற்காலிக பாதுகாப்பு உத்தரவை புக்கிட் மேர்தாஜம் நீதிமன்றம் வழங்கியுள்ளது. அனைத்து குழந்தைகளும் மருத்துவ பரிசோதனைக்குப் பின் அரசாங்கத்தின் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் நலன் முக்கியமாகக் கருதப்படும் என்றும், பொது மக்கள் குழந்தைகள் மீதான மீறல்கள் குறித்து உடனே புகார் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Comments