விலை உயர்வும், நிதிச் சுமையும் அதிகரித்துள்ள நிலையில், பலர் PTPTN கல்விக் கடன் மறுவமைப்பு திட்டத்தின் மூலம் நிம்மதி பெறுகின்றனர்.மலேசியா தேசிய உயர்கல்வி நிதிக் கழகம் (PTPTN) தொடங்கிய #BolehBincang திட்டத்தின் கீழ், கடனாளிகள் தங்களின் தற்போதைய வருமானம் மற்றும் செலவுகளை அடிப்படையாகக் கொண்டு மாத தவணைகளை மறுவமைத்து செலுத்தலாம்.2007-இல் RM16,950 கடனெடுத்த சுஹாச்லின், வீட்டுக் கடனுக்குப் பிறகு முழு தவணையைச் செலுத்த முடியாததால் கடந்த ஆண்டு கடனை மறுவமைத்தார். இதன் மூலம் அவர் செலுத்தும் மாத தவணை RM180-இல் இருந்து RM95.36 ஆகக் குறைந்தது. நேரடி கடன் பிடிப்பு (direct debit) முறையில், தாமதமின்றி செலுத்த முடிந்ததால் அவரது நிதிநிலை கட்டுப்பாட்டில் வந்ததாக கூறுகிறார்.சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு பொறியாளர் சொங் சுக் டிங், தனியார் நிறுவன VSS-இற்கு பிறகு PTPTN கடனில் மறுவமைப்பைத் தேர்ந்தெடுத்தார். முன்பு தவணைகளை மாறுபட்ட அளவில் (RM50 அல்லது RM100) செலுத்தியதால் CCRIS மதிப்பெண்கள் பாதிக்கப்பட்டன. மறுவமைப்புக்குப் பிறகு, நிலையான மாத தவணை திட்டத்துடன் கடனைச் செலுத்த முடிகிறது என கூறுகிறார்.இவர்கள் இருவரும், PTPTN கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிதிக் கடமையுடன் சமூகப் பொறுப்பாகவும் காண்கிறார்கள். “நாமும் இந்த நிதியிலிருந்து பயனடைந்துள்ளோம். திருப்பிச் செலுத்துவதன் மூலம் அடுத்த தலைமுறையினரும் இதன் பயனை பெற முடியும்” என கூறுகிறார்கள்.PTPTN வழங்கும் இத்தகைய வசதிகள் கடனாளிகளுக்கு சரியான நேரத்தில் உதவுவதாகவும், கடன் தவிர்க்காமல் நேருக்கு நேர் எதிர்கொண்டு மறுவமைப்பை தேர்ந்தெடுப்பதே சிறந்தது என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.மேலும் தகவலுக்கு myPTPTN செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது [www.ptptn.gov.my](http://www.ptptn.gov.my) தளத்திலுள்ள Live Chat வாயிலாகவும், PTPTN Careline (03-2193 3000) வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.