அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், ஸ்காட்லாந்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஒருவரையொருவர் பாராட்டினர். டிரம்ப், ஸ்டார்மரின் குடும்பத்தை புகழ்ந்து, "அவருக்கு சிறந்த மனைவி இருக்கிறார்" என கூறினார். அதே நேரத்தில், இமிக்ரேஷன், வரி மற்றும் ஆற்றல் கொள்கைகள் தொடர்பாக எச்சரிக்கையும் தெரிவித்தார்.லண்டன் மேயர் சதீக் கானை "கெட்ட நபர்" என விமர்சித்த டிரம்பின் கருத்துக்கு பதிலளித்த ஸ்டார்மர், “அவர் எனது நண்பர்” எனக் கூறி அவரைக் காப்பாற்றினார். இருவரும் சிறிய அணுக்கரு உலைகள் குறித்து பேசினாலும், காற்றாலை ஆற்றல் குறித்து வேறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தினர். டிரம்ப், "காற்றால் தயாரிக்கப்படும் மின்சாரம் மோசமானது" என விமர்சிக்க, ஸ்டார்மர் "நாம் கலவையான ஆற்றலை நம்புகிறோம்" என பதிலளித்தார்.செப்டம்பரில் நடைபெற உள்ள டிரம்பின் இரண்டாவது அரசு முறை பயணத்திற்காக இருவரும் உற்சாகமாகக் காத்துள்ளனர். இந்நிலையில், அவர் தனது தாயார் பெயரில் புதிய கால்பந்து விளையாட்டு மைதானத்தை ஸ்காட்லாந்தில் திறக்க உள்ளார்.