Offline
ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் மற்றும் நாசா 2018க்குப் பிறகு முதன்முறையாக நேரடியாக சந்திப்பு.
By Administrator
Published on 07/30/2025 09:00
News

ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் திமித்ரி பகனோவ், அமெரிக்காவின் இடைக்கால நாசா தலைவரான ஷான் டஃபியுடன் ஹூஸ்டனில் ஜூலை 31-ஆம் தேதி நேரடியாக சந்திக்க உள்ளார். 2018 பிறகு இது முதல் தலைமை மட்டத்தில் நடைபெறும் சந்திப்பாகும்.இவர்கள், விண்வெளி ஸ்டேஷன் பணிக்கால நீட்டிப்பு, ரஷ்யா-அமெரிக்காவின் கூட்டு பணி, மற்றும் விண்வெளி ஸ்டேஷனை பாதுகாப்பாகத் தரையிறக்கும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கவுள்ளனர்.இந்நிலையில், நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-11 விண்வெளிப் பயணத்திற்கு முன்னோடியாக, பகனோவ், அந்த பயணக்குழுவினரையும், ரஷ்ய விண்வெளியாளரான ஓலெக் பிளாட்டோனோவையும் சந்திக்கவுள்ளார்.இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்ற துறைகளில் குறைந்தாலும், விண்வெளித் துறையில் மீண்டும் நெருக்கம் ஏற்படுவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.

Comments