Offline
சீனாவில் கனமழையும் நிலச்சரிவும்: நால்வர் உயிரிழப்பு, 3 நாள் கடும் எச்சரிக்கை.
By Administrator
Published on 07/30/2025 09:00
News

சீனாவின் பீஜிங் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பீஜிங் மியுன் புறநகரில் மட்டும் 4,400 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். குடியிருப்புகள் நீரில் மூழ்கி, வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்தன. 10,000-க்கும் அதிகமானோர் மின் துண்டிப்பால் பாதிக்கப்பட்டனர். மழை மற்றும் நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்து, 8 பேர் காணாமல் போயுள்ளனர்.பீஜிங் மற்றும் 11 மாகாணங்களில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு சீனாவில் அடுத்த 3 நாட்கள் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஷான்டாங் மாகாணத்தில் வெள்ளத்தில் 2 பேர் உயிரிழந்து, 10 பேர் காணவில்லை. சிச்சுவான் மாகாணத்தில் நிலச்சரிவால் 5 பேர் உயிரிழந்தனர். பொதுமக்கள் உச்சஸ்தாயி எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments