தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ள சடுசங் பகுதியின் காய்கறி சந்தையில் இன்று சோகமான துப்பாக்கிச்சூடு சம்பவம் ஏற்பட்டது. துப்பாக்கியுடன் வந்த ஒருவன், பாதுகாப்புப் பணியில் இருந்த 4 காவலர்களையும், அங்கிருந்த ஒரு பெண்ணையும் சுட்டு கொன்றார். பின்னர், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வன்முறைச் சம்பவத்தில் மொத்தமாக 6 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, தாக்குதல் நடத்தியவர் யார் மற்றும் சூட்டின் பின்னணி என்ன என்பதை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதே நேரத்தில், தாய்லாந்து–கம்போடியா எல்லை மோதல் தொடர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.