அரசியலில் முழுமையாக ஈடுபாடாகியுள்ள விஜய்யின் கடைசி படம் "ஜனநாயகன்" என எதிர்பார்க்கப்படுகிறது, இது வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது. லியோ படத்துக்குப் பிறகு லோகேஷ் தற்போது ரஜினியின் "கூலி" பட ப்ரோமோஷனில் பிஸியாக உள்ளார். இதில் பேசிய லோகேஷ், "விஜய் இல்லாமல் எல்சியு பூரணமில்லை" என தெரிவித்துள்ளார். விஜய் மீண்டும் நடிப்பாரா என்பது அவரது முடிவின் பேரில் தான் என்று கூறியுள்ளார்.விஜய் தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமா தொடர்வது சிக்கலாகலாம், தோல்வி ஏற்பட்டால் திரும்பும் வாய்ப்பு இருக்கிறது. இதேசமயம், அட்லீயும் ராயப்பன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளார். எனவே, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவின் பிறகே விஜய்யின் சினிமா தொடர்ச்சி குறித்து தெளிவாக தெரியும்.