ரஜினியின் ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாவவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், நாகர்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 2ம் தேதி இசை வெளியீட்டும் ட்ரைலரும் வெளியாகும். வெளிநாடுகளில் தொடங்கிய ப்ரீ புக்கிங்கில் ‘கூலி’ இதுவரை ரூ.5 கோடிக்கு மேல் வசூலித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. ரிலீஸுக்கு முன்னேவே இப்படம் சாதனை படைக்கும் என நம்பப்படுகிறது.