தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வளர்ந்து கதாநாயகனாக மாறிய சூரியின் நடிப்பில், இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கிய "மாமன்" படம் கடந்த மே 16 அன்று வெளியானது. லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்த இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தாய் மாமன்-மருமகன் உறவை உணர்வுபூர்வமாகக் கூறும் இந்த குடும்பப்படம் ரூ.48 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், “மாமன்” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் உணர்ச்சிகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதைக் குறிப்பிட்ட சூரி, இது பலரின் மனங்களைத் தொட்டுள்ளது என்பதில் மகிழ்ச்சி தெரிவித்தார்.