Offline
ஓய்வு பெறுவதற்கான கட்டாய வயது மறுபரிசீலனை செய்யப்படும்: பிரதமர்
By Administrator
Published on 08/01/2025 09:00
News

மலேசியா வயதானவர்கள் (அதிக ஆயுட்காலம்) கொண்ட நாடாக மாறுவதை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால், ஓய்வு பெறுவதற்கான கட்டாய வயது மறுபரிசீலனை செய்யப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று 13ஆவது மலேசியா திட்டத்தை தாக்கல் செய்தபோது கூறினார். மே மாதம், சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சர் அஸ்லினா ஓத்மான் சைட், ஓய்வூதிய வயதை 65 ஆக நீட்டிக்கும் அரசாங்க ஆய்வை முன்மொழிந்தார். பல ஓய்வு பெறும் ஊழியர்கள் தங்கள் 60 வயதிலும் சுறுசுறுப்பாகவும் திறமையாகவும் இருந்தனர் என்று கூறினார்.

2014 ஆம் ஆண்டில், மலேசியா பொது, தனியார் துறைகளுக்கு ஓய்வூதிய வயதை முறையே 58 மற்றும் 55 இல் இருந்து 60 ஆக உயர்த்தியது. ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வயதானதை ஊக்குவிக்கும் அதே வேளையில் முதியவர்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டது இந்த நடவடிக்கை என்றார் அவர்.

கட்டாய ஓய்வூதிய வயதை உயர்த்துவதற்கான திட்டம் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அன்வார் அப்போது கூறினார். 2040 ஆம் ஆண்டில் மலேசியா 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், எதிர்பார்த்ததை விட விரைவில் முதியோர் நாடு என்ற நிலையை அடையும் என்று புள்ளிவிவரத் துறை முன்பு கூறியது.ம் கடந்த ஆண்டு நிலவரப்படி, இந்தக் குழு மொத்த மக்கள் தொகையான 34.1 மில்லியனில் 11.6% அல்லது 3.9 மில்லியனாக இருந்தது.

Comments