Offline
மழை எச்சரிக்கை: சிலாங்கூர் உட்பட 7 மாவட்டங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய கனமழை எதிர்பார்ப்பு
By Administrator
Published on 08/02/2025 08:00
News

ஷா ஆலம், 

இன்று  சுமார் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மாவட்டங்களில் பெர்னம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங் மற்றும் உலு லங்காட் ஆகியவை அடங்கும்.

மேலும், இதே நிலைமைகள் கோலாலம்பூர், கிளந்தான், கெடா, பேராக், திரங்கானு, நெகிரி செம்பிலான், ஜோகூர், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களிலும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் மழை பதிவாகும் சூழ்நிலைகளில் இடியுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கைகள் வெளியிடப்படுவதாகவும், இவை வெளியான நேரத்திலிருந்து ஆறு மணி நேரத்திற்குள் மட்டுமே செல்லுபடியாகும் குறுகிய கால எச்சரிக்கைகள் எனவும் வானிலைத் துறை விளக்கியது.

மேலும் சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு http://www.met.gov.my இணையதளத்தையும், சமூக ஊடகங்களையும் பார்வையிட பொதுமக்களுக்கு வானிலைத் துறை பரிந்துரை செய்துள்ளது. myCuaca என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்வதும் பயன்படக்கூடியதாகும்.

Comments