Offline
இம்ரான்கானின் ஆதரவாளர்கள் 166 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
By Administrator
Published on 08/02/2025 09:00
News

இஸ்லமபாத்,பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக் – இ – இன்ஸாஃப் கட்சித் தலைவருமான இம்ரான் கான், ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு, கடந்த 2023-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தின்போது, பஞ்சாப் மாகாணத்தில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.

அப்போது, பாகிஸ்தானின் புலனாய்வுத் துறை அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலகங்களும், ராணுவத் தளவாடங்களும் போராட்டக்காரர்களால் அடித்து தகர்க்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் 185 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட நிலையில், 108 பேருக்கு, பைசலாபாத்திலுள்ள பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, இன்று தீர்ப்பளித்துள்ளது.

Comments