சென்னை:
பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மதன் பாப் என்ற மதன் பாபு இன்று காலாமானர்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மதன் பாபுவின் உயிர் இன்று பிரிந்தது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் மதன் பாப். 100க்கும் அதிகமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணி அளவில் அவர் உயிரிழந்திருக்கின்றார். அவரது உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இவர் தமிழ் சினிமாவில் நீங்கள் கேட்டவை என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனார். குறிப்பாக நடிகர் விஜயின் பூவே உனக்காக, ப்ரண்ட்ஸ், கண்ணுக்குள் நிலவு, யூத், நடிகர் அஜித் குமாரின் வில்லன், கமல்ஹாசனின் பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தனது வித்தியாசமான சிரிப்பால் மக்கள் மனதில் நிலைத்து நின்றார்.
சினிமா நடிகர் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வந்தார். நிகழ்ச்சி தொகுப்பாளர், நிகழ்ச்சி நடுவர் உள்ளிட்ட பணிகளையும் செய்தார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அசத்த போவது யாரு? என்ற காமெடி நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்டார். மதன் பாபுவுக்கு தற்போது 71 வயது ஆகிறது.
சென்னை அடையாறு இல்லத்தில் மதன் பாபு வசித்து வந்தார். இந்நிலையில் தான் உடல் நலக்குறைவால் மதன் பாபு இன்று காலமானார். இருப்பினும் அவர் எந்த மாதிரியான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார என்பது பற்றி உடனடியாக தகவல் வெளியாகவில்லை.