Offline
பெயர் குழப்பத்தால் கைதி மாற்றி விடுதலை: அமெரிக்க சிறை அதிகாரிகள் பணிநீக்கம்
By Administrator
Published on 08/04/2025 08:00
News

அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என சுமார் 1,500 பேர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

 

இந்தச் சிறையில் கலீல் பிரையன் (30) என்ற கைதியும் அடைக்கப்பட்டு இருந்தார். இவரது தண்டனை காலம் முடிந்த நிலையில் கடந்த வாரம் அவரை விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் பெயர் குழப்பத்தால் அதே பெயருடைய மற்றொரு கைதியை சிறை அதிகாரிகள் விடுதலை செய்தனர்.

இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக 2 சிறைத்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதே சிறையில் இருந்துதான் கடந்த மே மாதம் 10 கைதிகள் தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.

Comments