Offline
தாய்லாந்தில் இரு மலேசியர்கள் உயிரிழப்பு
By Administrator
Published on 08/04/2025 08:00
News

யாலா:

தாய்லாந்தின் யாலா மாகாணத்தில் இரண்டு மலேசியர்கள் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்ததாக சாங்க்லாவில் உள்ள மலேசிய துணைக் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

 

முதல் சம்பவம்
56
வயதுடைய கெடா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் ஆகஸ்ட் 1ஆம் தேதி “OK BETONG Bike Week” நிகழ்ச்சியில் பங்கேற்க பெத்தோங் நகரத்திற்கு சென்றிருந்தார். இடைவேளையின் போது கழிப்பறைக்கு சென்றவர் உணர்வு இழந்த நிலையில், அவர் உடனடியாக பெத்தோங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அரைமணிநேரத்திற்குப் பின்னர் அவரை மருத்துவர்கள் உயிரிழந்ததாக அறிவித்தனர்.

பெத்தோங் காவல்துறை தலைமைய விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் பொர்ன்சாய் சுனுவால் கூறுகையில், மருத்துவமனை மேற்கொண்ட பிரேத பரிசோதனையின்படி , அவரது மரணம் இயற்கை முறையில் ஏற்பட்டது என்றும், இந்த சம்பவத்தில் எந்த விதமான குற்றவியல் கூறுகள் அல்லது சந்தேகம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் உடல், அவரது குடும்பத்தினரால் பெற்றுக்கொள்ளப்பட்டு மலேசிய தூதரக உதவியுடன் கூலிம் நகரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

இரண்டாவது சம்பவம்
47
வயதுடைய பினாங்கை சேர்ந்த ஒருவர், யாலா மாவட்டத்தில் ஒரு உள்ளூர் நபரின் நான்கு சக்கர வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்தார். அவரது தலையில் கடுமையான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவரின் உடல் தற்போது சடாவ் மருத்துவமனையில் (சாங்க்லா) தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவரது குடும்பத்தினர் பினாங்கிற்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.

Comments