Offline
அடிக்கடி சிக்கலுக்குள்ளாகும் AirIndia! சிங்கப்பூர் – சென்னை ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு
By Administrator
Published on 08/05/2025 09:00
News

சென்னை:

சிங்கப்பூரில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமானம் ரத்து செய்யப்பட்டதால் சென்னை வரவேண்டிய 168 பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், சிங்கப்பூர் விமான நிலையத்திலிருந்து 168 பயணிகளுடன் நேற்று மீண்டும் சென்னைக்கு புறப்பட தயாரானது. அப்போது, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது.

இகுறித்து, தகவல் அறிந்து வந்த விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்தில் ஏற்பட்ட பழுதை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பழுது நீக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ரத்து செய்யப்பட்ட விமானம் பழுது சரிபார்க்கப்பட்டு நாளை (இன்று) காலை சென்னை செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

Comments