Offline
அமெரிக்காவில் மாயமானதாக தேடப்பட்டு வந்த இந்தியர்கள் 4 பேரும் சடலமாக மீட்பு
By Administrator
Published on 08/05/2025 09:00
News

வாஷிங்டன்,அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து பென்சில்வேனியாவிற்குச் சென்ற இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மாயமாகினர். உறவினர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்களைக் கண்டறிய முடியவில்லை. கடைசியாக ஜூலை 29-ஆம் தேதி அன்று, பென்சில்வேனியாவில் உள்ள ஒரு கடைக்குச் சென்றுள்ளனர்.காணாமல் போனவர்கள் டாக்டர் கிஷோர் திவான், 89, ஆஷா திவான், 85, ஷைலேஷ் திவான், 86, மற்றும் கீதா திவான், 84 என்பது விசாரணையில் தெரியவந்தது.

அனைவருமே முதியவர்கள் என்பதால், அவர்களின் நிலை குறித்த கவலை குடும்பத்தினர் மத்தியில் அதிகரித்தது. ஹெலிகாப்டர்கள் மூலம் தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்றது.இந்த நிலையில், நான்கு பேரும் சாலை விபத்தில் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு விர்ஜினியாவில் செங்குத்தான பள்ளம் ஒன்றில் விபத்தில் சிக்கியிருப்பதாக அந்நகர ஷெரிப் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், விசாரணை முடிவடைந்த பிறகு கூடுதல் தகவல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments