Offline
பினாங்கில் ஜனவரி முதல் ஜூலை வரை RM 33.82 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் – 14,146 பேர் கைது
By Administrator
Published on 08/05/2025 09:00
News

KEPALA BATAS,

பினாங்கில் இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் ரெய்ட்களில் மொத்தம் RM33.82 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பினாங்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

“போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களில் 14,146 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 4,498 வழக்குகள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வைத்திருத்தலை சார்ந்தவையாகும். இதிலிருந்து 4,170 வழக்குகள் (92.71%) நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன,” என பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அல்வி செயினல் அபிடின் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மற்றொரு முயற்சியாக, 2010 முதல் 2024 வரை பறிமுதல் செய்யப்பட்ட 120 கிலோக்கும் அதிகமான போதைப்பொருட்கள், RM2 மில்லியன் மதிப்பில், இன்று அழிக்கப்பட்டன.

ஹெரோயின் மற்றும் மோனோஅசிடைல் மோர்பின்  19,750 கிராம்,கணாபிஸ் (கஞ்சா)  53,575.9 கிராம், கெட்டமின்2,873.9 கிராம், மெத்தாம்ஃபெடமின்  42,614.6 கிராம், உளவியல் மாற்றும் மாத்திரைகள் 2,087.1 கிராம் ஆகிய போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன.

இந்த போதைப்பொருட்கள் சந்தைக்குள் சென்றிருந்தால், சுமார் 13.8 லட்சம் பேர் அதை பயன்படுத்தியிருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Comments