ஈப்போ,
சிலிம் ரிவர் அருகே உள்ள பிளஸ் நெடுஞ்சாலையின் (KM 372.1) தெற்கே செல்லும் பாதையில் இன்று இரண்டு லோரிகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர், மேலும் இருவர் காயமடைந்தனர்.
காலை 12 மணிக்கு அவசர அழைப்பு பெற்றதையடுத்து ச்லிம் ரிவர் மீட்பு நிலையத்திலிருந்து குழுவொன்று அனுப்பப்பட்டது பேரா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் சபரோடி நோர் அகமட் தெரிவித்தார்.
மொத்தம் நான்கு பேர் இருந்த முட்டைகள் ஏற்றிய 10 டன் லோரி, சாலையோரத்தில் நிறுத்தியிருந்த சிமெண்ட் டிரெய்லர் லோரியின் பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருந்த இருவர் லோரியிலிருந்து வீசப்பட்டு உயிரிழந்தனர்.
மற்ற இரண்டு பேரும் சிறிய காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தார் சபரோடி.