சிபு,
சிபுவில் உள்ள ஜாலான் பெடாடா பகுதியில் இன்று மாலை, சாக்கடை குழிக்குள் தவறி விழுந்து இரண்டரை வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுவன் எத்தின் லிங் (Ehthin Ling) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சம்பவ இடத்திலேயே சுகாதார அமைச்சின் பணியாளர்களால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது என சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் (JBPM) செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தீயணைப்பு துறைக்கு இன்று மாலை 6.29 மணி அளவில் அவசர அழைப்பு வந்ததாகவும், சிபு மத்திய தீயணைப்பு நிலையத்தில் இருந்து 10 பேர் கொண்ட குழுவொன்று நான்கு நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அந்த சிறுவனின் தந்தை அவருடைய மகன் காணவில்லை என்றும், அருகிலுள்ள சாக்கடை குழிக்குள் தவறி விழுந்திருக்கலாம் என rescue குழுவினரிடம் தெரிவித்தார். உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது,” என்று JBPM செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மாலை 6.55 மணியளவில், சிறுவனின் உடல் சாக்கடையில் மிதக்கின்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. பின்னர் உடல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.