Offline
Menu
போயிங் நிறுவனத்தில் போர் விமானங்களை தயாரிக்கும் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
By Administrator
Published on 08/06/2025 09:00
News

வாஷிங்டன்,உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனங்களில் போயிங் முக்கியமானது. இந்நிறுவனம் பயணிகள் விமானங்கள், போர் விமானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இதனிடையே, அமெரிக்காவின் செயிண்ட் லுயிஸ், செயிண்ட் சார்லஸ், மிசோரிஸ், மஸ்கவுட், இலினொயிஸ் உள்ளிட்ட பகுதிகளில் போயிங் நிறுவனத்தின் போர் விமானங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன். இங்கு 3 ஆயிரத்து 200 ஊழியர்கள் போர் விமானங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஊழியர்கள் இன்றுமுதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போர் விமானங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Comments