மகாராஷ்டிராவில் கை ரிக்ஷாக்கள் இயங்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவின் மதேரன் என்ற சுற்றுலா நகரில் கை ரிக்ஷா பயன்பாடு இன்னும் நீடிக்கிறது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றதில் தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமயிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், கை ரிக்ஷாவில் மனிதனை மற்றொரு மனிதன் இழுத்துச் செல்வது மனிதநேயமற்ற செயல் என்றும் இது இந்திய அரசியலமைப்பின் சமூக மற்றும் பொருளாதார நீதிக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்தனர்.
சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் கடந்தும் இந்த நடைமுறை தொடர்வது வேதனை அளிக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
கை ரிக்சா ஒழிப்பு திட்டத்தை உடனடியாக மகாராஷ்டிரா அரசு செயல்படுத்த வேண்டும். மாற்று வாழ்வாதாரமாக மின்சார-ஆட்டோ திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதற்கான நிதியை அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்குள் கை ரிக்ஷாவை முழுமையாக நீக்கி, இ-ரிக்ஷா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் அரசுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.