ஷா ஆலம்:
கிள்ளான், பண்டார் செந்தோசாவில் ஒரு வெளிநாட்டு ஆண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 வெளிநாட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலை 23ஆம் தேதி ஒரு வெளிநாட்டு பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து, 20 முதல் 34 வயதுக்குள் உள்ள அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர் என தெற்கு கிள்ளான் மாவட்ட துணை போலீஸ் தலைவர் சுப்ரிட்டென்டண்ட் கமலாரிபின் அமான் ஷா உறுதிப்படுத்தினார்.
பண்டார் செந்தோசாவில் உள்ள ஒரு கடைத்தொகுதியிலுள்ள தங்குமிடத்தில் வைத்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
28 வயது வெளிநாட்டவர், தனது வீட்டில் குடிப்போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, அவருடைய அறை தோழியால் கழுத்திலும் உடலிலும் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த மற்ற ஆறு வெளிநாட்டவர்களும், கொலையுண்டவரின் உடலை குப்பைத் தொட்டிக்குள் புதைத்து மறைக்க் முயற்சி செய்துள்ளனர் என்று அவர் சொன்னார்.
இந்த சம்பவம் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதத்தையும் மீட்டுள்ளனர். விசாரணை அறிக்கைகள் துணை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று கிள்ளாங் நீதிமன்றத்தில் அனைவரும் கொலைக் குற்றச்சாட்டுக்கு முகங்கொடுக்கின்றனர். 34 வயதுடைய முதன்மை சந்தேகத்திற்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் கொலைக்குற்றம் சுமத்தப்படுகிறது. மேலும் நான்கு ஆண்களுக்கு பிரிவு 201-இன் கீழ் உடலை மறைப்பதற்கான குற்றம் சுமத்தப்படுகிறது.
மேலும், செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாத காரணத்தால், அனைவரும் குடிநுழைவு சட்ட்த்தன் கீழும் வழக்குக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.