Offline
Menu
மீதமுள்ள உணவை வீடற்றவருக்கு கொடுத்த காணொளி : 3 இளைஞர்கள் பிணையில் விடுதலை!
By Administrator
Published on 08/08/2025 09:00
News

சிரம்பான்,

மீதமுள்ள உணவுகளை (leftovers) சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த வீடற்றவருக்கு கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 14, 18, மற்றும் 19 வயதுடைய மூன்று இளைஞர்கள் நேற்று போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இளைஞர்கள் ஜோகூரில் இருந்து அழைத்து வரப்பட்டு, செவ்வாயன்று விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டனர் என சிரம்பான் போலீஸ் தலைவர் ACP Mohamad Hatta Che Din தெரிவித்தார்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 504, சிறிய குற்றங்கள் சட்டம் 1955 இன் பிரிவு 14 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 1998 இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.

மலேசிய தகவல் தொழில்நுட்ப ஆணையம் (MCMC) மூன்று இளைஞர்களின் அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளதாகவும், ஜோகூரின் இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் நிலையத்தில் அவர்களிடம் மேலதிக விசாரணைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. விசாரணைக்காக மூன்று கைப்பேசிகள் மற்றும் சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் அதிகமாக மிக அசிங்கமான (obscene) உள்ளடக்கம் இருப்பதாகவும், அது மக்கள் உணர்வுகளை புண்படுத்தியதுடன் பலரின் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிடப்படுகிறது.

வழக்கு தொடர்பாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக RM500,000 அபராதம் அல்லது 2 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Comments