Offline
3 தேசிய விருது : பார்க்கிங் படக்குழுவின் ஸ்டைலான கொண்டாட்டம்!
By Administrator
Published on 08/08/2025 09:00
Entertainment

71 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த பார்க்கிங் திரைப்படம் வென்றுள்ளது.

இப்படத்தை ராம் குமார் பால கிருஷ்ணன் எழுதி இயக்கினார்.சிறந்த துணை நடிகருக்கான விருதை பார்க்கிங் திரைப்படத்திற்காக எம்.எஸ் பாஸ்கர் வென்றுள்ளார்.

சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதை ராம்குமார் பால கிருஷ்ணன் பார்க்கிங் திரைப்படத்திற்காக வென்றுள்ளார்.

இந்நிலையில், 3 தேசிய விருதுகளை வென்ற ‘பார்க்கிங்’ படக்குழுவினரை நேரில் அழைத்து கமல்ஹாசன் வாழ்த்தினார். மேலும் படக்குழு இதனை இன்று கேக் வெண்ட்டி கொண்டாடி படத்தில் நடித்த மற்றும் பங்குப்பெற்ற அனைவரையும் அழைத்து படக்குழு விருந்தளித்துள்ளது. அப்போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

Comments