Offline
Menu
Pantai Dalamமில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 குடிசை வீடுகள், Mydin Mart உள்பட 4 வணிக வளாகங்கள் அழிந்தன
By Administrator
Published on 08/09/2025 09:00
News

கோலாலம்பூர்.

Pantai Dalamமில் நேற்று இரவு ஏற்பட்ட தீவிபத்தில் 14 குடிசை வீடுகள் மற்றும் Mydin Mart, Pasaraya Karnival உள்ளிட்ட நான்கு வணிக வளாகங்கள் முழுமையாக நாசமானது.

தீவிபத்தில் யாரும் காயமடையவில்லை என Pantai தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் வான் முகமட் ஷாஹ்ரிர் அஜீஸி வான் சையித் தெரிவித்தார்.

நேற்று இரவு 11.11 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், பந்தாய், ஹாங் துஅஹ், செபுதே மற்றும் ஸ்ரீ ஹர்தாமாஸ் நிலையங்களில் இருந்து 36 வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

தீவிபத்தில் சுமார் 0.074 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள குடிசை வீடுகள் மற்றும் 0.223 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வணிகக் கட்டிடங்கள் 80% வரை தீயில் முற்றிலும் சேதமடைந்தன.

பசாராயா கர்னிவலின் மேல் மாடி முற்றிலும் எரிந்துவிட்டது; Mydin Martடின் தரை மாடி 20% தீக்கிரையானது. அருகிலுள்ள மூன்று கடைகள் தலா 90% சேதமடைந்தன.

தீயை அதிகபட்சம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது 1.49am-இல். தீவிபத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதாக தெரிவித்தார்.

Comments