Offline
Menu
அயர்லாந்தில் இனவெறி சம்பவம்: இந்திய சிறுமியை தாக்கிய கும்பல்
By Administrator
Published on 08/09/2025 09:00
News

அயர்லாந்தில் சமீபகாலமாக இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் மூன்று தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த நிலையில் இந்திய சிறுமி மீது தாக்குதல் நடந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் அனுபா அச்சுதன். இவர் அயர்லாந்தில் 8 ஆண்டுகளாக நர்சாக பணியாற்றி வருகிறார்.

அவர் தனது கணவர் ,2 குழந்தைகளுடன் தென்கிழக்கு அயர்லாந்தில் உள்ள வாட்டர் போர்டு நகரில் வசித்து வருகிறார். இதற்கிடையே அனுபாவின் 6 வயது மகள் நியா வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்தபோது அவரை சில சிறுவர்கள் சரமாரியாக தாக்கினார்கள்.

சிறுமியின் முகம் உள்பட பல இடங்களை தாக்கினர். பின்னர் இந்தியாவுக்குத் திரும்பி செல்லுங்கள் என்று கூறிவிட்டு தப்பி சென்றனர். இதுதொடர்பாக சிறுமியின் தாய் அனுபா போலீசில் புகார் செய்தார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவார்கள். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments