PUTRAJAYA:
மலேசிய துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, சிங்கப்பூர் அரசின் அழைப்பின் பேரில், ஆகஸ்ட் 10 (சனிக்கிழமை) முதல் 11 (ஞாயிற்றுக்கிழமை) வரை சிங்கப்பூருக்கு இரண்டு நாள் பணிச்சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின் முக்கிய நோக்கம், சிங்கப்பூர் தேசிய தினத்தை ஒட்டி நடைபெறும் அணிவகுப்பு விழாவில் மலேசிய அரசை பிரதிநிதித்து கலந்து கொள்வதே ஆகும்.
இந்த நிகழ்வு, இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் முக்கியமான வாய்ப்பாகும் என வெளிவிவகார அமைச்சு கூறியள்ளது.
ஜாஹிட், தனது பயணத்தின் போது சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வொங் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளார். அதோடு, சிங்கப்பூர் துணை பிரதமர் கன் கிம் யோங் உடனும் இருநாட்டு கூட்டுறவு மற்றும் திட்டங்களைப் பற்றிய கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார்.